ஜித்தாவில் நடந்த காயலர் குடும்ப சங்கமம் நிகழ்ச்சி!

பிப்ரவரி 09, 2019 781

ஜித்தா (08 பிப் 2019): ஜித்தா, புனித மக்கா, மதீனா மற்றும் யான்பு காயல் பட்டினம் மக்கள் குடும்ப சங்கமம் நிகழ்ச்சி ஜித்தாவில் நடைபெற்றது.

பிப்ரவரி 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை ஜித்தா மெர்சல் வில்லேஜ் அருகில், அஷ்ஃப்வா இஸ்திராஹாவில் காலை முதல் இரவு 9 மணி வரை காயல் குடும்ப சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.

காலையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என தனித்தனியே வெளிப்புற விளையாட்டுப் போட்டிகள், நீச்சல், என அனைவரும் ஒன்றிணைந்து உற்சாகத்துடன் மகிழ்சியை வெளிப்படுத்தினர்.

பிற்பகல் காயல் நற்பணி மன்ற புதிய நிர்வாகிகள் தேர்தெடுக்கப் பட்டு அறிவிக்கப் பட்டார்கள். அவர்களுக்கு முன்னாள் நிர்வாகிகள் மற்றும் காயல்பட்டினம் மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

பின்பு காயல் பாரம்பரிய களரி உணவு அனைவருக்கும் வழங்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து உள்புற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக சமூக வலைதளங்கள் சாதகமா? பாதகமா? என்ற தலைப்பில் காயல் பட்டின மக்களுக்கே உரிய நகைச்சுவையுடன் கூடிய பட்டிமன்றம் நடைபெற்றது.

பின்பு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இறுதியில் இமாம் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

 

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...