அபூதாபி நீதிமன்றங்களில் இனி இந்தி மொழியில் விவாதிக்கலாம்!

பிப்ரவரி 10, 2019 600

அபூதாபி (10 பிப் 2019): ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபி நீதிமன்றங்களில் இந்தியர்கள் இனி இந்தி மொழியில் விவதிக்க ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது.

இந்தியர்களின் வழக்குகள் அபுதாபி உள்ளிட்ட வளைகுடா பகுதிகளில் ஆங்கிலம், அரபி ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே விவாதிக்கப் பட்டு வந்தது. இந்நிலையில் இந்தியர்களின் மொழி பிரச்சனையை கணக்கில் கொண்டு இனி இந்தி மொழியில் நீதிமன்றங்களில் விவாதம் நடத்த அபுதாபி நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

அரபி, ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கு அடுத்த படியாக மூன்றாவது மொழியாக இந்திக்கு அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான், நேபால் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களும் இந்தியில் விவாதம் நடத்த ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...