துபாயில் இளம் பெண் வன்புணர்வு!

பிப்ரவரி 10, 2019 525

ஜெபல் அலி (10 பிப் 2019): துபாய் ஜெபல் அலி பகுதியில் 25 வயது இளம் பெண் ஒருவர் வன்புணர்வு செய்யப் பட்டுள்ளார்.

பாகிஸ்தானை சேர்ந்த 29 வயது ஆண் ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவரை இரவு உணவுக்கு அழைத்துள்ளார். அவர்கள் இருவரும் உணவு அருந்திய பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்ற அவர் காரில் வைத்தே இரண்டு முறை வன்புணர்ந்துள்ளார்.

மேலும் இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனிடையே அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த ஜெபல் அலி போலிசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...