சவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் இந்தியா வருகை!

பிப்ரவரி 13, 2019 513

ரியாத் (13 பிப் 2019): சவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் வரும் 19, 20 தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

பிப்ரவரி 19 ஆம் தேதி புதுடெல்லி வரும் இளவரசர் முஹம்மது பின் சல்மான் இந்திய பிரதமர், ஜனாதிபதி, மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோரை சந்திக்கிறார்.

பின்பு இரு நாடுகளுக்கு இடையேயான பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவார் என்றும் எதிர் பார்க்கப் படுகிறது. இதனை சவூதி இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.

இளவரசர் முஹம்மது பின் சல்மான் முதல் முறையாக இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...