உயிருக்கு போராடிய தாயை காப்பாற்றிய 9 வயது சிறுமி - குவியும் பாராட்டுக்கள்!

பிப்ரவரி 16, 2019 537

துபாய் (16 பிப் 2019): ஐக்கிய அரபு அமீரகத்தில் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப் பட்ட தாயை, 9 வயது சிறுமி காப்பாற்றிய சம்பவத்தை அடுத்து சிறுமி பலரது பாராட்டையும் பெற்றுள்ளார்.

துபாய் அல் ரய்னா பள்ளியில் 4 ஆம் வகுப்பு பயிலும் மாணவி மஹ்ரா அல் முஹ்ரி. இவருடைய தாயாரும் இவரும் வீட்டில் இருந்தபோது தாய்க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே துரிதமாக செயல்பட்ட மஹ்ரா 999 ஆம்புலன்ஸுக்கு போன் செய்தார். அப்போது ஆம்புலன்ஸ் வீட்டை அடையும் வரை ஆம்புலன்ஸ் மருத்துவர் மஹ்ராவின் தாயின் நிலையை கேட்டறிந்து சில முதலுதவி அறிவுரைகளை போனிலேயே வழங்கினார்.

மருத்துவரின் ஆலோசனையைக் கேட்ட மஹ்ரா தாய்க்கு மருத்துவர் கூறிய முதலுதவிகளை செய்தார். இதனால் மஹ்ராவின் தாயார் பிரச்சனை எதுவும் இன்றி காப்பாற்றப் பட்டதோடு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல பெரும் அளவில் மருத்துவர்களுக்கு உதவி புரிந்துள்ளார்.

மஹ்ராவின் செயலை துபாய் ஆரோக்கிய அமைச்சகம் ,மற்றும் போலீஸார் வெகுவாக பாராட்டினர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...