காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு ஜித்தாவில் கண்டனம் மற்றும் வீரர்களுக்கு அஞ்சலி - வீடியோ!

பிப்ரவரி 19, 2019 517

ஜித்தா (19 பிப் 2019): காஷ்மீர் புல்வாமாவில் தீவிரவாத தாக்குதலில் உயிர் நீத்த CRPF வீரர்களுக்கு சவூதி ஜித்தா (AIOCC) (OICC)) Oversease Indian congress Committee சார்பில் அஞ்சலி செலுத்தப் பட்டது. மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு கண்டனமும் தெரிவிக்கப் பட்டது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலை உலக நாடுகள் கடுமையாக கண்டித்துள்ளன.

இந்நிலையில் கடந்த 17 பிப்ரவரி ஞாயிற்றுக் கிழமை ஜித்தா (AIOCC) (OICC)) Oversease Indian congress Committee சார்பில் அஞ்சலி செலுத்தப் பட்டது இந்த அஞ்சலி நிகழ்ச்சியை நசீர் குர்ஷித் இரங்கல் உரையை தொடங்கினார். முஹைதீன் சிராஜுத்தீன் நிகழ்ச்சியை இரங்கல் உரையுடன் தொகுத்து வழங்கினார்.

வீடியோ

மேலும் முஹம்மது இக்பால், கேடிஏ முனீர், மோகன் பாலன், நூருல் அமீன், ரஷீத் கொலட்டம், அஹமது பாஷா, ஜே.சி மோகன், ஜாஹீர் அஹமது, விலாஸ் அதூர், மற்றும் பொன்னுசாமி ஆகியோர் இரங்கல் உரை ஆற்றினர்.

அஸீம் ஜிசான் உறுதி மொழியை வாசிக்க அங்கிருந்த அனைவரும் ஒருமித்த குரலில் உறுதி மொழியை ஏற்றனர்.

இறுதியாக ஜாஹிர் ஹுசைன் நன்றி நவிழ CRPF வீரர்களுக்கான அஞ்சலி நிகழ்ச்சி நிறைவுற்றது. இதில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த 50 பேர் கலந்து கொண்டனர்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...