துபாயில் இளம் பெண் ஹோட்டலில் வைத்து வன்புணர்வு!

பிப்ரவரி 25, 2019 549

துபாய் (25 பிப் 2019): துபாயில் 26 வயது இளம் பெண் ஹோட்டலில் வைத்து வன்புணர்வு செய்யப் பட்டுள்ளார்.

பிலிப்பைன் நாட்டை சேர்ந்த இளம் பெண் சலூன் ஒன்றில் வேலை இருப்பதை அறிந்து அதன் உரிமையாளரை அணுகியுள்ளார். ஆனால் அங்கிருந்த எகிப்து நாட்டை சேர்ந்த ஒருவர் தான் அந்த பெண்ணுக்கு வேலை வாங்கித் தர உதவுவதாக கூறி அவரை ஹோட்டல் ஒன்றிற்கு நேர்காணல் என்ற பெயரில் அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு வைட்து இரண்டு முறை அந்த பெண் வன்புணர்வுக்கு ஆளாகியுள்ளார். இதுகுறித்து ஹோட்டல் ரிசப்சனில் அந்த பெண் முறையிட்டுள்ளார். இதனை அடுத்து ஹோட்டல் நிர்வாகம் போலீசுக்கு புகார் அளித்து உடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் குற்றவாளியை கைது செய்துள்ளது.

இவ்விவகரம் தொடர்பாக தற்போது துபாய் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...