ரியாத் தமிழ்ச் சங்கம் - புதிய நிர்வாகிகள் தேர்வு!

பிப்ரவரி 27, 2019 316

ரியாத் (27 பிப் 2019): ரியாத் தமிழ்ச் சங்கம் சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் இயங்கிவரும் தமிழர் கூட்டமைப்பாகும்.

தமிழுக்கும் தமிழருக்கும் அயராது தொண்டு செய்து வரும் ரியாத் தமிழ்ச் சங்கம் 2019-20 ஆண்டுக்கான தனது நிர்வாகிகளை அறிவித்துள்ளது.

அவ்வறிவிப்பின் படி, கவிஞர் பஃக்ருத்தீன் இப்னு ஹம்துன் தலைவராகவும் திரு. நெளஷாத் அலீ துணைத் தலைவராகவும், செயலாளராக திரு. செந்தில்குமார், பொருளாளர் பொறுப்பில் திரு. சதீஷும், இணை செயலராக திரு. சரவணனும் பொறுப்பேற்று வழி நடத்துவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியாத் வாழ் தமிழர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...