இந்தியா - பாகிஸ்தான் பதற்றத்தை தவிற்க அரபு நாடுகள் முயற்சி!

மார்ச் 01, 2019 520

ரியாத் (01 மார்ச் 2019): இந்தியா பாகிஸ்தான் பதற்றத்தை தவிற்க அரபு நாடுகள் முயற்சி மேற்கொண்டுள்ளன.

சவூதி வெளியுறவுத்துறை அமைச்சர் அல் ஜுபைர் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் பயணம் மேற்கொள்வார் என தெரிகிறது. மேலும் இந்தியா பாகிஸ்தான் பிரதமர்களுடன் தொடர்பு கொண்டு இரு நாட்டு அமைதி குறித்து பேசியதாகவும் தெரிகிறது.

மேலும் அபுதாபியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை இதுகுறித்து சந்தித்துப் பேசவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சவூதி தவிர பிற அரபு நாட்டு தலைவர்களும் இரு நாட்டு அமைதி குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...