ஜித்தா ததஜ நடத்திய இரத்த தான முகாம்!

மார்ச் 04, 2019 462

ஜித்தா (04 மார்ச் 2019): சவுதி அரேபியாவின் ஜித்தா மாநகரில் (02-03-2019 வெள்ளிக்கிழமை) ததஜ ஜித்தா கிளை சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

கிங் ஃபஹத் மருத்துவமனையில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த முகாமில் கலந்து கொண்ட 115 பேரில் 102 பேரிடமிருந்து இரத்ததானம் பெறப்பட்டது.

ஜூம்மா தொழுகைக்கு பிறகு துவங்கிய இந்த முகாமிற்கு தன்னார்வ தொண்டர்கள் தங்களது வாகனங்களில் கொடையாளிகளை அழைத்து வந்தனர். தமிழர்கள் பெரும்பான்மையினராக இருந்தாலும் இந்தியாவின் பிற மாநிலத்தவரும் கலந்து கொண்டனர். இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், எகிப்து என பல நாடுகளிலிருந்தும் கொடையாளிகள் வருகை தந்து குருதிக் கொடையளித்தனர்.

கிங் ஃபஹத் மருத்துவமனை இரத்ததான ஒருங்கிணைப்பாளர் மாசன் அல் குறைஷியின் தலைமையில் மருத்துவக்குழு சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தது.

இது போன்ற முகாம்கள் மக்களிடையே நல்லுறவையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என்று பாராட்டிய மாசன் அல்குறைஷி, இந்த முகாமில் வழங்கப்பட்ட இரத்ததானமானது மக்கா பகுதிக்குட்பட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டு தேவையுடையவர்களுக்கு வழங்கப்படும் என்றார்.

தவ்ஹீத் ஜமாஅத் மற்றும்; மருத்துவமனைக்கு இணைப்பு பாலமாக செயல்பட்டு வரும்; சாதிக், கொடையாளிகளுக்கு நன்றி கூறினார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஜித்தா மண்டலத்தின செயலாளரும்; இரத்ததான பொறுப்பாளருமான சலாஹ_தீன் பேசும் போது,

எங்களது அலுவல்களுக்கிடையில் இது போன்ற மனித நேயப்பணிகளை அடிக்கடி செய்து வருகின்றோம். பாதிக்கப்பட்டோருக்கு பொருளாதார உதவி செய்தல், சவுதி அரேபியாவில் இறப்பெய்தியவர்களை அடக்கம் செய்தல், அல்லது அவர்களது உடலை ஊருக்கு அனுப்ப எற்பாடு செய்தல் என பலவகையான மனித நேய பணிகளை செய்து வருகின்றோம். இது போன்ற முகாம்கள் மட்டுமின்றி அவசர தேவைகளுக்காகவும் அடிக்கடி இரத்ததானம் செய்து வருகின்றோம்’ என்றார்.

தமிழகத்தில் அதிகமானோர் இரத்ததானம் செய்ததில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்ந்து 11 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வருவதாக குறிப்பிட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டல தலைவர் முஹம்மது முனாஃப், சவுதி அரேபியாவிலும் தவ்ஹீத் ஜமாஅத் முதலிடத்தில் இருப்பதாக குறிப்பிட்டார்.

இது ஜித்தா மண்டலம் நடத்தும் 19 வது முகாமாகும்;. உலகின் பல நாடுகளில் வேலைகளுக்கு செல்லும் தமிழ்நாட்டினர் இது போன்ற மனிதநேய பணிகளை செய்வது பாராட்டத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...