ரியாத் மாநகரில் நடைபெற்ற பயிற்சி முகாம்!

மார்ச் 23, 2019 584

ரியாத் (23 மார்ச் 2019): சவுதி அரேபியாவின் தலைநகரமான ரியாத் மாநகரில் 22.03.2019 அன்று அகமும் புறமும்.. என்ற பயிற்சி முகாம் நடைபெற்றது.

ஆண்-பெண் புரிதலை மேம்படுத்தும் இந்த பயிற்சி முகாமில் உளவியல் நிபுணர் முனைவர் எம். ஹுசைன் பாஷா அவர்கள் கலந்துகொண்டு பயிற்சி அளித்தார்.

ரியாத் மண்டல தமுமுக மற்றும் விழி அமைப்பின் சார்பாக நடைபெற்ற இந்த பயிற்சி முகாமிற்கு மண்டலத் தலைவர் நூர் முஹம்மது அவர்கள் தலைமை வகித்தார். சிறப்பான ஏற்பாட்டினை நிர்வாகிகள் செய்திருந்தனர். திரளாக ஆண்களும் பெண்களும் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...