நியூசிலாந்து பிரதமருக்கு மரியாதை செய்த ஐக்கிய அரபு அமீரகம்!

மார்ச் 24, 2019 556

துபாய் (24 மார்ச் 2019): நியூசிலாந்து பிரதமரின் மனிதாபிமானத்தை கவுரவிக்கும் வகையில் துபாய் புர்ஜ் கலீஃபா உயர் கோபுரத்தில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா எர்டோன் புகைப்படத்தை பார்வைக்கு வைத்து மரியாதை செய்துள்ளது ஐக்கிய அரபு அமீரக அரசு.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

உலகையே அதிர்ச்சி அடையச் செய்துள்ள இந்த சம்பவத்திற்கு பல்வேறு நாட்டினரும் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நியூசிலாந்து மக்கள் முஸ்லிம்களுக்கு தங்களது ஆதரவை பலவகைகளில் தெரிவித்து வருகின்றனர். மேலும் கடந்த (வெள்ளிக்கிழமை) நியூசிலாந்தில் அனைத்து பெண்களும் ஹிஜாப் அணிந்து ஒற்றுமையை வலியுறுத்த பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்தன.

மேலும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா எர்டோன் இரண்டு நிமிட மவுண அஞ்சலிக்க கடந்த வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்திருந்தார். மேலும் வெள்ளிக்கிழமை தொழுகையை தேசிய தொலைக்காட்சி மற்றும் ரேடியோக்களில் ஒளிபரப்பு செய்யவும் நியூசிலாந்து பிரதமர் உத்தரவிட்டிருந்தார். இந்த தொழுகையில் பிரதமர் ஜெசிந்தா எர்டோனும் கலந்து கொண்டு பாதிக்கப் பட்ட முஸ்லிம்களூக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இந்நிலையில் ஜெசிந்தா எர்டோனின் மனிதாபிமான மிக்க செயலை போற்றும் வகையில் ஐக்கிய அரபு அமீரக அரசு புர்ஜ் அல் கலீஃபா உயர் கோபுரத்தில் ஜெசிந்தா எர்டோனின் படத்தை வெளியிட்டு கவுரவப் படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...