இந்தியா ஃப்ரேடர்னிட்டி ஃபோரம் நடத்திய மாபெரும் மக்கள் சங்கமம்:

ஏப்ரல் 03, 2019 438

ரியாத் (03 ஏப் 2019): சவுதி அரேபியாவில் வெளி நாடு வாழ் இந்திய மக்களுக்காக தொண்டாற்றி வரும் இந்தியா ஃப்ரேடர்னிட்டி ஃபோரம் ரியாத் தமிழ் பிரிவின் சார்பாக "ஃப்ரேடர்னிட்டி ஃபெஸ்ட் 2019" என்ற மாபெரும் மக்கள் சங்கமம் நிகழ்ச்சி சவுதி அரேபியா தலை நகர் ரியாதில் கடந்த வெள்ளிக்கிழமை (29-03- 2019) அன்று நடைபெற்றது.

சவுதி அரேபியாவில் வாழும் இந்திய மக்களுக்காக பல்வேறு சமூக சேவைகளை மேற்கொண்டு வரும் இந்தியா ஃப்ரேடர்னிட்டி ஃபோராம் ரியாத் தமிழ் பிரிவின் சார்பாக தமிழ் பேசும் மக்களை ஒன்றினைத்து மாபெரும் மக்கள் சங்கமம் நிகழ்ச்சி அல்கசீம் ரோட்டில் அமைந்துள்ள பால்ம் ரிசார்ட்டில் வைத்து காலை 9:30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்றது.

இந்தியா ஃப்ரேடர்னிட்டி ஃபோரத்தின் ஜோனல் தலைவர் பஷீர் இங்கபுழா அவர்களின் துவக்க உரையோடு காலை 9:30 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் Er.அஜ்மல் கான் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியின் நோக்கத்தை மாவட்ட செயலாளர் Er.ஃபைஜல் எடுத்துக்கூறினார்.

இச்சங்கமத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டுப்போட்டிகள், ஆண்களுக்கான வடம் இழுக்கும் போட்டி, தமிழர் கலாச்சார உறியடித்தல் போட்டி மற்றும் பல விளையாட்டு போட்டிகள், பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள், மருதாணி இடுதல் , பழங்களில் கலை நுட்பம் செய்தல் , வினாடி வினா என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

இச்சங்கமத்தின் சிறப்பு அம்சமாக வெளி நாடு வாழ் தமிழர்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொணரும் பொருட்டு சிறப்பு கண்காட்சி Dr காலித் (Ministry of Health) அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. இக்கண்காட்சியில் சிறுவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் அவர்களே உருவாக்கிய பல்வேறு வகையான அறிவியல் கண்டுபிடிப்புகளை செயல்முறை விளக்கங்களுடன் செய்து காண்பித்தனர், மேலும் வரலாற்று சம்பவங்களைய் குறிக்கும் பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.இதில் இந்தியன் சோசியல் ஃபோரம், இந்தியா ஃப்ரேடர்னிட்டி ஃபோராம் ஆகியவை இங்கு வசிக்கும் தமிழர்களுக்கு செய்துவரும் சமூகசேவை பணிகள் இடம்பெற்றிருந்தது. பங்கெடுத்த அனைத்து மக்களும் இக்கண்காட்சியை கண்டு ரசித்தனர். சிறந்த கண்காட்சி பொருளுக்கான தேர்வை பார்வையாளர்கள் ஓட்டு முறையில் தேர்ந்தெடுத்தனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிறப்பான மதிய உணவு மற்றும், தேநீர் வழங்கப்பட்டன.

சிறப்பு ஏற்பாடாக பெற்றோர்களுக்கான குடும்ப வாழ்வியல் நிகழ்ச்சியை பொறியாளர் அல் அமான் அவர்கள் சிறப்பாக நடத்தினார். பெண்களுக்கான மார்பக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சகோதரி ஆமினா ஹசன் அவர்களால் பெண்களுக்கு சிறப்பாக நடத்தப்பட்டது, மாணவ மாணவியருக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி பிர்தவுஸ் அவர்களால் நடத்தப்பட்டது.

மாலையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் குழந்தைகளின் வரவேற்பு கலைநிகழ்ச்சியுடன் துவங்கியது. இதில் ஜனாப் ஹைதர் அலி (Universal Inspection Company Riyadh Branch Manager), மஜ்மா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் முஹம்மது யாசின், ரியாத் தமிழ் சங்கம் தலைவர் ஜனாப் ஃபக்ருதீன், இந்தியன் சோஷியல் ஃபோராம் ஜித்தாதமிழ் பிரிவின் தலைவர் பொறியாளர் அல் அமான், இந்தியன் சோஷியல் ஃபோராம் தம்மாம் தமிழ் பிரிவின் தலைவர் மெளலவி முஹம்மது இக்பால் மன்பயி, இந்தியன் சோஷியல் ஃபோராம் ரியாத் தமிழ் பிரிவின் தலைவர் ஜாபிர், இந்தியா ஃப்ரேடர்னிட்டி ஃபோராம் ரியாத் ரீஜியன் செயலாளர் முஹம்மது ராஃபி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இறுதியாக மெளலவி முஹம்மது இக்பால் மன்பயி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியாக ரியாத் மண்டல செயற்குழு உறுப்பினர் ரமுஜுதீன் அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்வில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...