ஜித்தாவில் நடந்த குழந்தை மனசு:பயிற்சி முகாம்!

ஏப்ரல் 10, 2019 292

ஜித்தா (09 ஏப் 2019): சவுதி அரேபியாவின் ஜித்தா மாநகரத்தில் 06.04.2019 அன்று குழந்தை வளர்ப்பின் சவால்களையும் அதை எதிர்கொள்ளும் வழிமுறைகளையும் விளக்கும் குழந்தை மனசு என்ற சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

தாயகத்திலிருந்து வருகை தந்த உளவியல் நிபுணர் *முனைவர் எம். ஹுசைன் பாஷா* அவர்கள் பயிற்சி அளித்தார்.

மிக குறுகிய நாளில் ஏற்பாடு செய்த போதிலும் 200க்கும் அதிகமாக மக்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு பலனடைந்தனர். ஜித்தா மேற்கு மண்டல தமுமுக பொறுப்பாளர் காரைக்கால் அப்துல் மஜீத், ஜித்தா மாநகர செயலாளர் ராஜா முஹம்மத் , துணை தலைவர் செல்வகனி, பகுதி பொறுப்பாளர் பரக்கத் அலி ஆகையோர் , முன்னிலை வகித்தனர்.

இந்த பயிற்சி முகாமில் அபுல் அமான் அவர்கள் தலைமை வகித்தார். பொறியாளர் கீழை இர்பான் அவர்கள் சிற்றுரையாற்றினார்.

கடந்த (2018) ஆண்டு தமுமுக சார்பாக ஹாஜிகளுக்கு சிறப்பான சேவை செய்ததற்காக அதிரை அஜ்வா நைனா அவர்களுக்கு இந்திய தூதரகம் சார்பாக
வழங்கிய
நற்சான்றிதழை , சகோதரர் அதிரை சம்சுதீன் அவர்களிடம் சகோதரர் நூருல் அமீன் அவர்கள் வழங்கினார். மாநகர துனை செயலாளர் இலியாஸ் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சி தமுமுகவின் மனிதவள மேம்பாட்டு அமைப்பான விழியின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...