குவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்!

ஏப்ரல் 20, 2019 439

குவைத் (20 ஏப் 2019): குவைத்தில் மயக்க மருந்து உபயோகிப்பதால் மரணங்கள் அதிகரிப்பதாக மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

குவைத்தில் குறைந்தது 18 ஆயிரம் பேர் மயக்க மருந்து உபயோகிப்பதாக சர்வே ரிப்போர்ட் தெரிவிக்கிறது. இதில் 2017 ஆம் ஆண்டு 67 பேர் மயக்க மருந்து உபயோகித்ததால் மரணம் அடைந்துள்ளனர். அதேபோல 2018 ல் அது 116 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1650 பேர் மயக்க மருந்து தொடர்பாக போலீசார் கைது விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் 60 பேர் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஆவர்.

மயக்க மருந்து உபயோகிப்பவர்களில் 40 சதவீதம் பேர் 16 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள். மருந்து கட்டுப்பாட்டு கழகம் நடத்திய சர்வேயில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...