ரம்ஜான் பிறையைக் கண்டால் தகவல் தர உத்தரவு!

மே 03, 2019 447

ரியாத் (02 மே 2019): ரம்ஜான் பிறையைக் கண்டால் அருகில் உள்ள நீதிமன்றங்களில் தகவல் தெரிவிக்க வேண்டி சவூதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இவ்வருடம் ஷஃபான் பிறை 29  சனிக்கிழமை மாலை ரம்ஜான் பிறை தென்பட்டால் அருகில் உள்ள நீதிமன்றங்களில் ஆதாரங்களுடன் தகவல் தெரிவிக்கலாம் என்று சவூதி உச்ச நீதிமன்றம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

இதற்கிடையே பிறை தென்படாத பட்சத்தில் உச்ச நீதிமன்றமும் இதில் முக்கிய கவனம் செலுத்தும் என்று கூறப்படுகிறது.

courtesy: அரப் நியூஸ்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...