மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முயற்சியில் இந்திய பெண் கத்தாரிலிருந்து மீட்பு!

மே 03, 2019 398

புதுடெல்லி (03 மே 2019): கத்தாரில் சிக்கித் தவித்த இந்திய பெண் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முயற்சியில் மீட்கப் பட்டார்.

ஐதராபாத்தை சேர்ந்த சயீதா மர்யம் என்ற பெண் நர்ஸ் வேலைக்கு கத்தார் சென்றார். ஆனால் அங்கு ஒரு வீட்டில் பணியாளராக அவர் நியமிக்கப் பட்டார். அவர் ஒரு ரூமில் நான்கு நாட்கள் அடைக்கப் பட்டதாக கூறப் படுகிறது.

இதுகுறித்து அவரது உறவினர்கள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு கோரிக்கை வைத்தனர். உடன் கத்தார் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்ட சுஷ்மா சுவராஜ் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதன்படி மீட்கப் பட்ட சயீதா மர்யம் தற்போது இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப் பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...