சவூதி நஜ்ரான் விமான சேவை ரம்ஜான் 1 முதல் மீண்டும் தொடக்கம்!

மே 03, 2019 386

ரியாத் (03 மே 2019): சவூதி நஜ்ரான் விமான நிலையம் ரம்ஜான் 1 முதல் மீண்டும் தொடங்கும் என்று சவூதி டெபுட்டி கவர்னர் அமீர் துர்க்கு பின் ஹதிலுல் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களால் கடந்த 4 வருடங்களாக செயல் படாமல் இருந்த நஜ்ரான் விமான நிலையம் மீண்டும் தொடங்கப் படவுள்ளது.

தொடக்கத்தில் ஜித்தா, ரியாத் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சவூதி அரேபியன் விமானம் மூலம் சேவை தொடங்கப் பட்டு பின்பு பல பகுதிகளில் விமான சேவை விரிவு படுத்தப் படும் என்று சிவில் ஏவியேஷன் அதாரிட்டி தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...