பொது இடங்களில் உணவு சாப்பிடுபவர்களுக்கு ஒரு மாதம் சிறை!

மே 07, 2019 575

குவைத் (07 மே 2019): புனித ரமலான் மாதத்தில் பகல் வேளைகளில் பொது இடங்களில் உணவு சாப்பிடுபவர்களுக்கு ஒரு மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என்று குவைத் அரசு அறிவித்துள்ளது.

வளைகுடா நாடுகளில் ரமலான் நோன்பு திங்கள் முதல் தொடங்கியுள்ளது. இந்நிலையில் குவைத் பாதுகாப்புத்துறை அதிகாரி தவ்ஹீத் அல் கந்தரி தெரிவிக்கையில், "புனித ரமலான் மாதத்தில் பொது இடங்களில் உணவு சாப்பிடுதல் குற்றமாகும், அவ்வாறு விதியை மீறுபவர்களுக்கும் அவர்களுக்கு உதவுபவர்களுக்கும் ஒரு மாதம் சிறைத் தண்டனை மற்றும் 100 தினார் அபராதம் விதிக்கப்படும்." என்றார்.

மேலும் பகல் வேளைகளில் உணவகங்களை திறந்து வைத்தால் அந்த உணவகங்கள் இரண்டு மாதங்கள் சீல் வைக்கப்படும். என்றார்.

மேலும் ரமலான் மாதத்தை முன்னிட்டு மால்களுக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...