முன்னறிவிப்பின்றி தாமதமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்!

மே 07, 2019 565

ரியாத் (07 மே 2019): ரியாத்திலிருந்து கோழிக்கோடு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் தகவலின்றி தாமதம் ஆனதால் பயணிகள் ஆவேசம் அடைந்தனர்.

ரியாத்திலிருந்து நேற்று (06 மே 2019) இரவு 11:45 பிற்பகல் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் 15 மணி நேரம் தாமதம் ஆனது. இதற்கு முன்னறிவுப்பு எதுவும் இல்லாததால் பயணிகள் விமான நிலையத்தில் திண்டாடினர்.

இந்நிலையில் பயணிகள் 100 க்கும் அதிகமானோர் ஓட்டல்களில் தங்க வைக்கப் பட்டனர். எனினும் பயணிகள் சமாதானம் அடையவில்லை. மேலும் ஓட்டலில் கொடுக்கப் பட்ட உணவுகளையும் அவர்கள் உண்ணவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து விமானம் 15 மணி நேரம் தாமதமாக செவ்வாய்க் கிழமை மாலை 5 மணிக்கு பயணிகள் புறபப்பட்டுச் சென்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...