கிறிஸ்தவர் கட்டிய மசூதியில் 800 பேருக்கு இஃப்தார் விருந்து!

மே 11, 2019 598

துபாய் (11 மே 2019) துபாயில் கிறிஸ்தவ தொழிலதிபர் கட்டியுள்ள மசூதி ஒன்றில் 800 பேருக்கு இவ்வருடம் ரம்ஜான் மாதத்தில் ஒவ்வொரு நாளும் இஃப்தார் விருந்து அளிக்கப் படுகிறது.

 கேரள மாநிலத்தை சேர்ந்த சாஜி செரியன் என்ற தொழிலதிபர் துபாயில் தொழில் புரிந்து வருகிறார். இவரது நிறுவனத்தில் பணிபுரியும் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக ஃபுஜைரா பகுதியில் மசூதி ஒன்றினையும் அவர் கட்டியுள்ளார்.

 

அங்கு சுமார் 250 முஸ்லிம் தொழிலாளர்கள் தொழுகை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவ்வருடம் ரம்ஜான் நோன்பை முன்னிட்டு அவரது நிறுவனம் அல்லாது பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் நோன்பு திறக்கும் விதமாக 800  பேர் உணவருந்தக் கூடிய வகையில் உணவுகள் தயாரித்து இஃப்தார் விருந்து அளித்து வருகிறார்.

 இது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...