ஜித்தாவில் தமுமுக சார்பில் நடந்த இஃப்தார் விருந்து நிகழ்ச்சி!

மே 11, 2019 638

ஜித்தா (11 மே 2019): ஜித்தாவில் தமுமுக சார்பில் இஃப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜித்தா லக்கி தர்பார் உணவக ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, 10-05-2019 வெள்ளிக்கிழமை மாலை 06 மணிக்கு தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு ஜித்தா தமுமுக துணை செயலாளர் இலியாஸ் தலைமை வகித்தார். மக்கா தமுமுக பொறுப்பாளர் பொறியாளர் கீழை இர்ஃபான் சிற்றுரை வழங்கினார். மேலும் குர்ஆனை இலகுவாக விளங்கிக் கொள்வது எப்படி?  என்பது குறித்து கஸ்ஸாலி விளக்கம் அளித்தார்.

நிகழ்ச்சியின் முக்கியமாக தமுமுக மற்றும் மமக மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா காணொளி வழியாக நேரடி காட்சியில் சிறப்புறை ஆற்றினார்.

இறுதியில் தமுமுக ஜித்தா கிளை பொறுப்பாளர் பொறியாளர் ரிஸ்வான் நன்றியுரை வழங்கினார். இறுதியில் இரவு உணவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

இந்நிகழ்ச்சியை 150 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...