ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப் பெரிய மசூதி திறப்பு!

மே 12, 2019 663

ஷார்ஜா (12 மே 2019): ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய மசூதி திறந்து வைக்கப் பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்திலேயே மிகப்பெரிய மசூதியான ஷார்ஜா மசூதியை டாக்டர் சேக் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி, மசூதியை திறந்து வைத்தார். மசூதியின் உள்ளே 5000 பேர் தொழகூடிய வசதி கொண்டது.

மேலும் மசூதியை சுற்றி 25000 பேர் தொழும் அளவில் சுற்றளவு கொண்டது. மேலும் பெண்கள் தொழுவதற்கு தனி வசதி உள்ளது. மசூதியை சுற்றிலும் பூங்கா வசதி, இஸ்லாமிய நூலகங்கள், என பல வசதிகள் உள்ளன.

முஸ்லிம் அல்லாதவர்கள் சுற்றிப் பார்க்கும் வகையிலும் மசூதியில் வசதிகள் செய்யப் பட்டுள்ளன.

இஸ்லாமிய கட்டடக் கலை வல்லுநர்களால் வடிவமைக்கப் பட்டுள்ள ஷார்ஜா மசூதி எமிரேட்ஸ் சாலையில் அமைந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...