துபாய் விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நான்காக உயர்வு!

மே 18, 2019 1346

துபாய் (18 மே 2019): துபாயில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணம் செய்த நான்கு பேரும் உயிரிழந்தனர்.

துபாயில் பயிற்சி விமானம் ஒன்று வியாழன் அன்று விபத்துக்கு உள்ளானது. இதில் மூன்று பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர்களும் ஒரு தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவரும் உயிரிழந்தனர்.

இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மற்ற இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

விபத்திற்குள்ளான DA 43 விமானம் பிரிட்டிஷ் நாட்டிற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...