வளைகுடா சேவையை தொடங்கும் இன்னொரு இந்திய விமானம்!

மே 22, 2019 740

மஸ்கட் (22 மே 2019): கோ எர் இந்திய விமானம் மஸ்கட் மற்றும் கன்னூர் இடையே இயக்கப்படவுள்ளது.

ஜெட் ஏர்வேய்ஸ் விமான சேவை நிறுத்தப் பட்ட நிலையில், ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில் மஸ்கட் கன்னூர் இடையே கோ ஏர் விமானம் வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது.

குறைந்த விலையில் இயக்கப்படவுள்ள இந்த விமானம் பள்ளி விடுமுறைக் காலங்களில் பயணிகளுக்கு உதவும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...