பரங்கிப்பேட்டை நல்வாழ்வுச் சங்கம் ரியாத்தில் இஃப்தார் விழா

மே 22, 2019 628

ரியாத் (22 மே 2019): பரங்கிப்பேட்டை இஸ்லாமிய நல்வாழ்வுச் சங்கம் - ரியாத் அமைப்பு நடத்திய இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்வு கடந்த 17 மே 2019 அன்று நூஃபா மகிழகத்தில் நிகழ்வுற்றது.

அமைப்பின் தலைவர் பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்) தலைமை தாங்கிய இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ரியாத் வாழ் பரங்கியர்கள் குடும்ப சகிதம் பங்கேற்றனர்.

தலைவரின் வரவேற்புக்குப் பின்னர், ஜகாத், தான தருமங்களின் அவசியம் குறித்து கு. நிஜாமுத்தீன் சொற்பொழிவாற்றினார். மருத்துவரும் சொற்பொழிவாளருமான டாக்டர் முஹைதீன் 'குர்ஆனை நோக்கி' என்ற தலைப்பில் குர்ஆனைச் சரியாகப் புரிந்து நடக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி எடுத்துரைத்தார்.

வினாடி வினா தேர்வுகளும் வைக்கப்பட்டு பெண்கள், குழந்தைகளுக்குப் பரிசில்களும் வழங்கப்பட்டன.

சையத் முஸ்தஃபா ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட்ட இவ்விழாவில் தமிஜூத்தீன், உபைதுல்லா, ஷாஹுல் ஹமீத், முபாரக், பாபு நூருல் அமீன், காதர்மஸ்தான், செல்லராஜா, ஆகியோரின் உழைப்பும் உதவிகளும் பெருமளவில் இருந்தன.

பல்வேறு கல்விஉதவி, மக்கள் நலத்திட்டங்களை அமைப்பின் சார்பில் முன்னெடுப்பதாக செயலாளர் உபைதுல்லா தெரிவித்தார்.

போக்குவரத்து ஏற்பாடுகளை கஜ்ஜாலி, முபாரக் ஆகியோர் திறம்படச் செய்திருந்தனர்

நோன்பு துறப்பில் தொடங்கி அதிகாலை உணவு வரை நீண்ட இந்நிகழ்வு ரியாத் வாழ் பரங்கிப்பேட்டை வாசிகளின் நினைவில் நிற்கும் விழாவாக அமைந்தது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...