கத்தர் நாட்டிற்கு வேலைக்கு செல்பவர்களுக்கு இனிய செய்தி - கத்தர் அதிரடி அறிவிப்பு!

மே 23, 2019 1043

தோஹா (23 மே 2019): கத்தார் நாட்டிற்கு வேலைக்காக செல்பவர்கள் இனி எந்த தொகையும் செலுத்த வேண்டியதில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் விசாவிற்காகவும், விமான டிக்கெட்டிற்காகவும் மற்றும் ஏஜென்சி கமிஷன் என தொகைகள் கட்ட வேண்டிய நிலை இருந்து வருகின்றன.

இந்நிலையில் கத்தர் நாட்டிற்கு வேலைக்கு செல்பவர்கள் விசாவிற்கோ, விமான டிக்கெட்டிற்கோ அல்லது எஜென்ஸி கமிஷனோ செலுத்த வேண்டியதில்லை. கத்தரில் எந்த நிறுவனம் வேலைக்கு ஆள் எடுக்கிறதோ அந்த நிறுவனமே அனைத்து செலவுகளையும் ஏற்கும் என்று கத்தர் நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கத்தர் நாட்டு அரசு அந்நாட்டு வளர்சியில் மிக முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப் படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...