சவூதியில் விபத்தில் காலை இழந்து தவித்த தமிழருக்கு இந்தியன் சோசியல் ஃபாரம் உதவி!

மே 29, 2019 483

ஜித்தா (29 மே 2019): சவூதியில் விபத்தில் ஒரு காலை இழந்து தவித்த தமிழருக்கு இந்தியன் சோசியல் ஃபாரம் உதவியால் அவர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப் பட்டார்.

தமிழகத்திலுள்ள திருச்சி மாவட்டத்தை சார்ந்த பால சுப்பிரமணியன் என்பவர் சவுதி அரேபியாவிலுள்ள நஜ்ரான் என்னுமிடத்தில் வேலை செய்து வந்தார் கடந்த 2018 -நவம்பர் மாதம் நடந்த ஒரு விபத்தில் ஒரு கால் துண்டாகி மிகவும் அவதிபட்டும்,தான் வேலை செய்யும் இடத்தின் உரிமையாளரும் எந்த ஒருஆதரவும் மற்றும் அவருக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தையும் கொடுக்காத நிலையில் கடந்த 4 மாதமாக மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருந்தார்.

இந்த சமயத்தில் பால சுப்புரமணியன் கடந்த மாதம் இந்தியன் சோஷியல் ஃபோரம்-ரியாத் மாநில கமிட்டி மூலமாக ஜித்தா சோஷியல் ஃபோரம் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உதவி நாடினார்.

அதனடிப்படையில் பால சுப்புரமணியத்தை பண உதவி செய்து கொடுத்து, சம்பள பாக்கி, வேலை செய்த இடத்திலிருந்து இழப்பீட்டு தொகை போன்றவற்றை உரிமையாளரிடம் இருந்து தூதர அதிகாரிகள் திரு. ஷர்மா மூலமாக பெற்று கொடுத்து (26-05-2019) வெள்ளியன்று பால சுப்புரமணியத்தை இந்தியன் சோஷியல் ஃபோரம் -ஜித்தா தமிழ் கமிட்டி நிர்வாகிகளின் தொடர் முயற்சியால் தாயகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

திருச்சி விமான நிலையத்தில் திருச்சி மாவட்ட SDPI நிர்வாகிகள் பால சுப்பிரமணியத்தை வரவேற்றனர் .

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...