துபாய் கத்தார் உள்ளிட்ட நாடுகளிலும் செவ்வாய்க்கிழமை பெருநாள்!

ஜூன் 03, 2019 477

துபாய் (03 ஜூன் 2019): சவூதியில் செவ்வாய்க்கிழமை நோன்புப் பெருநாள் உறுதி செய்யப் பட்டதை அடுத்து கத்தார் துபாய் உள்ளிட்ட நாடுகளிலும் உறுதி செய்யப் பட்டது.

சவுதியில் திங்கள் கிழமை மாலை ஷவ்வால் பிறை தென்பட்டதை அடுத்து அங்கு நோன்பு பெருநாள் செவ்வாய் கிழமை கொண்டாடப் படும் என அறிவிக்கப் பட்டது.

சவூதி அறிவிப்பை அடுத்து வளைகுடா நாடுகளிலும் செவ்வாய் கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப் படலாம் என எதிர் பார்க்கப் பட்டது. இந்த நிலையில் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் செவ்வாய்க்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...