வளைகுடா நாடுகளில் கொண்டாடப் பட்ட நோன்புப் பெருநாள்!

ஜூன் 04, 2019 597

ரியாத் (04 ஜூன் 2019): வளைகுடா நாடுகளில் இன்று ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப் பட்டது.

சவூதியில் ஷவ்வால் பிறை நேற்று தென்பட்டதை அடுத்து இன்று (செவ்வாய்க் கிழமை) நோன்புப் பெருநாள் கொண்டாடப் படும் என அறிவிக்கப் பட்டது. இதனை அடுத்து வளைகுடா நாடுகளான, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் இன்று நோன்பு பெருநாள் கொண்டாடப் பட்டது.

பெருநாளை ஒட்டி காலை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தொழுகையில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...