துபாய் பேருந்து விபத்தில் 8 இந்தியர்கள் உட்பட 17 பேர் பலி!

ஜூன் 07, 2019 1345

துபாய் (07 ஜூன் 2019): துபாயில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 8 இந்தியர்கள் உட்பட 17 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

துபாய்க்கு ஓமனிலிருந்து வந்து கொண்டிருந்த சொகுசுப் பேருந்து நேற்று மாலை விபத்துக்குள்ளானது. இதில் 17 பேர் பலியாகியுள்ளனர். அதில் 8 பேர் இந்தியர்கள் என துபாய் இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.

பலியானவர்கள், ராஜகோபாலன், ஃபெரோஸ்கான் பதான், ரேஷ்மா ஃபெரேஸ்கான் பதான், தீபக் குமார், ஜமாலுத்தீன் அரக்கவீட்டில், கிரன் ஜானி, வாசுதேவ், மற்றும் திலக்ரம் ஜவஹர் தாகூர், ஆகியோர் உறுதி செய்யப் பட்டுள்ளன. மூன்று பேரின் உடல்கள் உறுதி செய்யப் படவில்லை.

காயம் அடைந்தவர்கள் ரஷீத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

பலியான இந்தியர்கள் குடும்பங்களுக்கு துபாய் இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...