பாஸ்போர்ட் இல்லாமல் கத்தார் வந்த பிரதமரின் விமான பைலட்!

ஜூன் 07, 2019 487

தோஹா (07 ஜூன் 2019): பங்களாதேஷ் பிரதமர் சேக் ஹசீனா வந்த விமானத்தின் பைலட் பாஸ்போர்ட் இல்லாமல் வந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பங்களாதேஷ் பிரதமர் சேக் ஹசீனா பின்லாந்திலிருந்து பங்களாதேஷ் திரும்பும்போது, கத்தார் வழியாக வந்தார். கத்தாரில் சேக் ஹசீனா வந்த விமானத்தை ஓட்டிய பைலட் பாஸ்போர்ட் இல்லாமல் வந்துள்ளார். பின்பு வேறொரு விமானத்தில் பைலட்டின் பாஸ்போர்ட் கத்தாருக்கு அனுப்பி வைக்கப் படது. எனினும் பைலட் எப்படி பாஸ்போர்ட் இல்லாமல் வந்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே சேக் ஹசீனா வேறொரு பைலட் மூலம் அவர் சனிக்கிழமை டாக்கா அனுப்பி வைக்கப் படுவார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...