எகிப்து முன்னாள் அதிபர் முஹம்மது முர்ஸி நீதிமன்றத்தில் மரணம்!

ஜூன் 17, 2019 645

கெய்ரோ (17 ஜூன் 2019): எகிப்து முன்னாள் அதிபர் முஹம்மது முர்ஸி நீதிமன்றத்தில் விசாரணையின்போது திடீரென மரணம் அடைந்தார்.

67 வயதான முர்ஸி நீதிமன்றத்தில் விசாரணையின்போது பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2012 ல் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப் பட்ட முர்ஸி, பின்பு 2013 ல் அவரது ஆட்சி கலைக்கப்பட்டு கைது செய்யப் பட்டார். மேலும் பல வழக்குகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...