சவூதி குறித்து தவறான தகவல்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை!

ஜூன் 18, 2019 972

ரியாத் (18 ஜூன் 2019): சவூதி அரேபியா குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்புவோர் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் சவூதியில் இரவு கேளிக்கை விடுதிகள் தொடங்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவின. ஆனால் இவை எதிலும் உண்மை இல்லை என்று சவூதி பொழுதுபோக்குத்துறை தெரிவித்துள்ளது.

சவூதியில் சில அம்சங்களில் புதிய நடைமுறைகள் அமுல்படுத்தப் பட்ட போதும் அவை இஸ்லாமிய வரையறைக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்றும் சவூதி பொழுதுபோக்குத்துறை தெரிவித்துள்ளது. பெண்கள் வாகனங்கள் ஓட்ட அனுமதி அளித்ததும் சில வரையரைக்கு உட்பட்டே என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தவறான தகவல் பரப்புவோர் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...