ஜித்தாவில் சவூதி அரேபியாவிற்கான புதிய இந்திய தூதரகருக்கான வரவேற்பு நிகழ்ச்சி!

ஜூன் 18, 2019 1131

ஜித்தா (18 ஜூன் 2019): சவூதி அரேபியாவிற்கான புதிய இந்திய தூதருக்கு ஜித்தாவில் இந்தியர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப் பட்டது.

சவூதி அரேபியா இந்திய தூதரகத்திற்கு புதிய இந்திய தூதராக டாக்டர்.அவ்சாஃப் சயீத் அவர்கள் பதவியேற்றுள்ளார்.புதிய இந்திய தூதுவரை வரவேற்கும் விதமாக வரவேற்பு விழா கடந்த வெள்ளிக்கிழமை 14/06/2019 அன்று ஜித்தாவில் உள்ள ட்ரைடன்ட் நட்சத்திர ஹோட்டலில் ஜித்தாவில் வாழும் அனைத்து இந்தியர்களின் சார்பாக சிறப்பாக நடைபெற்றது.

கன்சுல் ஜெனரல் நூர் ரஹ்மான் சேக் வரவேற்பு உரை ஆற்றினார். இதனை தொடர்ந்து இந்த நிகழ்வில் ஜித்தா தமிழ் சங்கம், Mepco, தமுமுக, ISF, iff SNM, JEMS, Jtm உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டு டாக்டர்.அவ்சாஃப் சயீத் அவர்களுக்கு வாழ்த்து கூறி ஸால்வை அணிவித்து சிறப்பித்தனர்.

மேலும் இந்திய மக்களுக்கு மத்தியில் உரையாற்றிய இந்திய தூதர் டாக்டர்.அவ்சாஃப் சயீத் அவர்கள் இந்திய தூதரகத்துடன் இணைந்து மனிதநேய பணிகளை அனைவரும் தொடர்ந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும் இந்நிகழ்வை சகோதரர் சிராஜ் உள்ளிட்ட அனைத்து சகோதரர்களும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...