முஹம்மது முர்சி மரணம் குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் - துருக்கி அதிபர் வலியுறுத்தல்!

ஜூன் 29, 2019 589

ஒசாகா (29 ஜூன் 2019): எகிப்து முன்னாள் அதிபர் முஹம்மது முர்சி மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப் பட வேண்டும் என்று துருக்கி அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

எகிப்து நாட்டில் ஜனநாயக முறையில் முதல் முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் முகமது மோர்சி(67). இவரை அந்நாட்டு ராணுவம் இவரை வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து நீக்கியது.

மேலும் அப்போது நடந்த போராட்டத்தில் பலர் உயிரிழந்தனர். இது தொடர்பாக முகமது மோர்சிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் பல வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் இருந்தன.

இதனிடையே வழக்கு விசாரணைக்காக மோர்சி கடந்த திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது திடீரென நீதிமன்றத்திலேயே மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பே அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த துருக்கி அதிபர் எர்டோகன், முகமது மோர்சியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபையும் உலக நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்களும் வலியுறுத்த வேண்டும்’ என குறிப்பிட்டார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...