துருக்கி கார் குண்டு வெடிப்பில் மூன்று பேர் பலி!

ஜூலை 06, 2019 329

இஸ்தான்பூல் (06 ஜூலை 2019): துருக்கியில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பில் 3 பேர் உடல்சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

துருக்கி நாட்டின் வடமேற்கு எல்லையில் ரேஹென்லி என்ற நகரம் உள்ளது. இந்நகரம் துருக்கி-சிரியா எல்லை அருகே அமைந்துள்ளது. இங்கு ரேஹென்லி நகரில் உள்ள முக்கிய சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று பலத்த சத்தத்துடன் இன்று வெடித்துச் சிதறியது.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த குண்டு வெடிப்பில் காரில் பயணம் செய்த 3 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

துருக்கியில் உள்ள சிரியா அகதிகள் முகாமை குறிவைத்து பல்வேறு பயங்கரவாத குழுக்கள் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...