ஏர் இந்தியா விமானத்தில் மக்காவிலிருந்து ஜம் ஜம் புனித நீர் கொண்டு வர தடையில்லை!

ஜூலை 09, 2019 686

ஜித்தா (09 ஜூலை 2019): ஏர் இந்தியா விமானத்தில் அனைத்து பயணிகளும் மக்காவிலிருந்து ஜம் ஜம் புனித நீர் கொண்டு வரலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏர் இந்தியா விமானத்தில் ஜித்தா - ஐதராபாத், ஜித்தா - கொச்சி விமானங்களில் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை புனித ஜம் ஜம் நீரை எடுத்து வர தடை செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா விமான நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அந்த அறிவிப்பை ஏர் இந்தியா விமான நிர்வாகம் வாபஸ் பெற்றுள்ளது. மேலும் Bissiness Class பயணிகள் 45 கிலோ பொருட்களுடன் 5 லிட்டர் ஜம்ஜம் நீர் கொண்டு வரலாம் என அனுமதிக்கப் பட்டுள்ளது. அதேபோல Economic Class 40 கிலோ பொருட்களுடன் 5 லிட்டர் ஜம் ஜம் நீர் கொண்டு வர அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...