துருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி!

ஜூலை 20, 2019 436

இஸ்தான்பூல் (20 ஜூலை 2019): துருக்கி - ஈரான் எல்லையில் ஏற்பட்ட விபத்தில் 17 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

துருக்கி – ஈரான் நாடுகளின் எல்லையை ஒட்டிய வேன் என்ற பகுதியில் சிறிய ரக பேருந்து ஒன்று 67 அகதிகளை ஏற்றிக்கொண்டு (வியாழக்கிழமை) சென்று கொண்டிருந்தது.

மலைப்பாங்கான நிலப்பரப்பை பேருந்து கடந்தபோது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஐந்து குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...