பிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பதற்றம்!

ஜூலை 21, 2019 606

ஹேர்முஷ் (21 ஜூலை 2019): பிரிட்டனுக்கு சொந்தமான எண்ணெய்க் கப்பல் ஒன்றினை ஈரான் சிறைப்பிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரியாவிற்கு மசகு எண்ணெய் ஏற்றிச் சென்ற ஈரான் கப்பலை கிப்ரால்டார் என்ற இடத்தில் இங்கிலாந்து கடற்படை சிறைப்பிடித்தது.

இதன்காரணமாக கோபமடைந்த ஈரான் பதிலடி கொடுக்கும் வகையில் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை சிறை பிடிக்க போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் (வெள்ளிக்கிழமை) பாரசீக வளைகுடாவில் ஹோர்முஷ் ஜலசந்தி பகுதியில் சென்று கொண்டிருந்த இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படை சிறை பிடித்துள்ளது.

ஸ்டெனா இம்பீரியோ எனப்படும் இங்கிலாந்து எண்ணெய் கப்பல் சவுதி அரேபியா துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்த போது சிறை பிடிக்கப்பட்டது.

இந்தியா, ரஷ்யா, வாத்விய மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்த 23 ஊழியர்கள் இதில் பயணித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக வளைகுடாவில் பதற்றம் அதிகரித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...