மாட்டுக்கறிக்காக கொல்லப்பட்ட சிறுவன் ஜுனைதின் பெற்றோர் மக்கா வருகை - IFF தன்னார்வலர்கள் சந்திப்பு!

ஜூலை 30, 2019 756

மக்கா (30 ஜூலை 2019): மாட்டுக்கறிக்காக உயிர் நீத்த சிறுவன் ஜுனைதின் பெற்றோரை இந்தியா ஃபெடர்னிடி ஃபோரத்தின் தலைவர்கள் மக்காவில் சந்தித்தனர்.

ஹரியானாவில் மாட்டு இறைச்சியை வைத்திருப்பதாகக் கூறி, ஜூன் 22, 2017 அன்று ரயிலில் வைத்து இந்துத்துவா பயங்கரவாதிகளால் ஜுனைத் என்ற சிறுவன் கொடுமையாகன் தாக்கப் பட்டார். இந்த தாக்குதலில் ஜுனைத் பரிதாபமாக உயிரிழநதார்.

புனித நோன்பில் பெருநாள் கொண்டாட்டத்திற்காக பொருட்கள் வாங்கி சென்றபோது இந்த கொடூர சம்பவம் நடந்தது. இவ்விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் புனித ஹஜ்ஜுக்காக ஜுனைதின் தந்தை ஜலாலுதீன் மற்றும் அவரது தாய் ஜிரா ஆகியோர் வெள்ளிக்கிழமை மக்கா வந்தடைந்தனர். அவர்களை மக்காவில் உள்ள இந்தியா ஃபெடர்னிடி ஃபோரத்தின் தலைவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வரவேற்றனர். கிரீன் கேட்டகிரியான அஜியாத்தி உள்ள அவர்களது அறையில் அவர்களைச் சந்தித்த IFF - இன் தலைவர்கள், ஜுனைத் கொலை தொடர்பான வழக்கு குறித்து விசாரித்தனர்.

தங்கள் மகனைக் கொலை செய்த பயங்கரவாதிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தந்தை ஜலாலுதீன் கூறினார். பின்னர் தங்களுக்கான உதவிகளுக்கு IFF - ஐ தொடர்பு கொள்ளுமாறும், தேவையான உதவிகளை செய்து தருகிறோம் என்றும் IFF - ன் நிர்வாகிகள் உறுதி அளித்தனர்.

IFF - ன் துணை கேப்டன் அப்துஸ்ஸலாம், உதவி ஒருங்கிணைப்பாளர் சாகீர் மற்றும் மருத்துவ பிரிவு பொறுப்பான சாலிஹ் கோட்டயம் ஆகியோர் கலந்து கொண்டனர். இருவரும் தங்கள் ஹஜ் சடங்குகளை முடித்து ஆகஸ்ட் 18 அன்று திரும்புவர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...