இங்கிலாந்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹஜ்ஜுக்காக மக்கா வருகை!

ஆகஸ்ட் 09, 2019 327

ஜித்தா (09 ஆக 2019): இங்கிலாந்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் 2019 ஹஜ் புனித யாத்ரீகர்களாக மக்கா வருகை புரிந்துள்ளனர்.

2019 ஹஜ் கிரியைகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகின்றன. சுமார் 20 லட்சம் ஹஜ் யாத்ரீகர்கள் உலகம் எங்கிலிருந்தும் மக்கா வருகை புரிந்துள்ளனர்.

இந்நிலையில் இவ்வருடம் ஹஜ் புனித யாத்ரீகர்களாக இங்கிலாந்து நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் யாஸ்மீன் குரேஷி, நாஜ் ஷா ஆகியோர் மக்காவிற்கு வருகை புரிந்துள்ளனர்.

யாஸ்மீன் குரேஷிக்கு இது இரண்டாவது முறையாகும். நாஜ் ஷா முதலாவது முறையாக ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...