இந்தியாவிலிருந்து ஹஜ்ஜுக்கு 190747 பேர் மக்கா வருகை!

ஆகஸ்ட் 09, 2019 353

ஜித்தா (09 ஆக 2019): ஹஜ் கிரியைகள் இன்று தொடக்கம் ஆகியுள்ளது.

உலகம் எங்கிலிருந்தும் இவ்வருடம் ஹஜ்ஜுக்காக மக்காவிற்கு 19 லட்சம் பேர் வருகை புரிந்துள்ளனர். அதில் இந்தியாவிலிருந்து 1,90,747 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை புரிந்துள்ளனர். இதில் ஹஜ் கமிட்டி மூலம் 1,39 959 ஹஜ் யாத்ரீகர்களும், தனியார் ஹஜ் நிறுவனங்கள் மூலம் 50,788 ஹஜ் யாத்ரீகர்களும் மக்கா வருகை புரிந்துள்ளனர்.

நேற்று மாலை முதல் மக்காவின் மினவிற்கு சென்றுள்ள ஹஜ் யாத்ரீகர்கள் சனிக்கிழமை அரஃபா என்னும் முக்கிய இடத்தில் பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள்.

ஹஜ் கிரியைகள் தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...