ஹஜ்: மக்கா அரஃபாவில் திடீர் மழை!

ஆகஸ்ட் 10, 2019 696

ஜித்தா (10 ஆக 2019): ஹஜ்ஜில் மக்காவின் அரஃபாவில் இன்று மாலை திடீர் மழை பெய்தது.

ஹஜ் 2019 கிரியைகள் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஹஜ்ஜின் முக்கிய தினமான இன்று மக்காவின் அரஃபா என்னும் பகுதியில் 20 லட்சம் ஹஜ் யாத்ரீகர்கள் ஒன்று கூடி பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை முதல் கடும் வெயில் காணப் பட்ட நிலையில் மாலை 2:30 மணி அளவில் திடீர் என மழை பெய்தது. இதனால் பாதிப்பு எதுவும் இல்லை.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...