பஹ்ரைன் ஸ்ரீகிருஷ்ணா கோவில் மறு சீரமைப்பு பணிகள் - பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்!

ஆகஸ்ட் 20, 2019 251

மனாமா (20 ஆக 2019): பஹ்ரைன் ஸ்ரீகிருஷ்ணா கோவில் மறு சீரமைப்புப் பணிகளை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்.

மூன்று நாள் சுற்றுப் பயணமாக வளைகுடா செல்லும் பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 23 ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பின்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பஹ்ரைன் செல்லும் பிரதமர் மோடி, அங்குள்ள ஸ்ரீகிருஷ்ணா கோவில் மறு சீரமைப்பு பணிகளை தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து 25 ஆம் தேதி அபுதாபி செல்லும் பிரதமர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பிரதமர் மோடி பயணிப்பது மூன்றவது முறையாகும். ஆனால் பஹ்ரைனுக்கு பிரதமர் முதன் முதலாக பயணிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...