போலி விசா விளம்பரம் - குவைத் இந்திய தூதரகம் எச்சரிக்கை!

ஆகஸ்ட் 21, 2019 373

குவைத் (21 ஆக 2019): குவைத் நாட்டிற்கு நர்ஸ் பணிகளுக்கு ஆட்கள் எடுப்பதாக வரும் போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்று குவைத் இந்திய தூதரகம் எச்சரித்துள்ளது.

குவைத் நாட்டில் வெளிநாட்டினருக்கான விசா நடைமுறைகளில் பல தடைகள் விதிக்கப் பட்டுள்ளன. அதன் படி இந்தியாவிலிருந்து நர்ஸ் பணிக்கு குவைத் நாட்டிற்கு விசா வழங்கவும் தடை விதிக்கப் பட்டுள்ளது. இதுவரை அந்த தடை நீக்கப் படவில்லை.

இந்நிலையில் இந்தியாவில் CA INTERNATIONAL என்ற டிராவல்ஸ் நிறுவனம் மூலம் குவைத்திற்கு நர்ஸ் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக போலி விளம்பரம் ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருவதாக குவைத் இந்திய தூதரகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து குவைத்தில் இதுவரை நர்ஸ் விசா வழங்கும் எந்த அனுமதியையும் குவைத் ஆரோக்கிய அமைச்சகம் வழங்கவில்லை என்றும் போலி விளம்பரங்களை கண்டு ஏமாற்றம் அடைய வேண்டாம் என்றும் குவைத் இந்திய தூதரகம் எச்சரித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...