ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது - பிரதமர் மோடிக்கு வழங்கப் பட்டது!

ஆகஸ்ட் 24, 2019 426

துபாய் (24 ஆக 2019): ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான 'ஆர்டர் ஆஃப் ஜயத்' விருது பிரதமர் மோடிக்கு இன்று வழங்கப்பட்டது.

மூன்று நாள் சுற்றுப் பயணமாக வளைகுடா சென்றுள்ள பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்தில் வரவேற்பு அளிக்கப் பட்டது. இளவரசரான முகமது பின் சயத் அல் நஹ்யான் - பிரதமர் மோடி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதனை அடுத்து பிரதமர் மோடி இரு நாட்டு நல்லுறவுக்கு மேற்கொண்ட பணிகளை போற்றும் வகையில் ஐக்கிய அரபு அமீரகம் அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆர்டர் ஆஃப் ஜயத் விருதை அறிவித்தது. இந்நிலையில் மூன்று நாடுகள் பயணத்தின் ஒரு கட்டமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு இந்த விருதை பட்டத்து இளவரசரான முகமது பின் சயத் அல் நஹ்யான் வழங்கினார்.

காஷ்மீர் விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகள் தங்களுக்கு ஆதரவளிக்க பாகிஸ்தான் வலியுறுத்தி வரும் நிலையில் பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. முக்கியத்துவம் பெறுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...