சவூதியில் பணியிடங்களில் புகை பிடிக்க தடை!

ஆகஸ்ட் 31, 2019 371

ரியாத் (31 ஆக 2019): சவூதியில் பணியிடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது.

பணியிடங்களில் புகை பிடிப்பதால் பிறருக்கு இடையூராக இருப்பதாக பல புகார்கள் இருந்த நிலையில், ஆரோக்கியம் மற்றும் பணியிடங்களில் சுகாதாரத்தை கடைபிடிக்கும் விதத்திலும் இந்த தடை விதிக்கப் பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இதற்கான உத்தரவை தொழிளலர் வளர்சி அமைச்சர் பொறியியலாளர் அஹமது பின் சுலைமான் அல்ராஜ்ஹி பிறப்பித்தார்.

மேலும் நாளை முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. மேலும், தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...