சிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சிறப்பு விருது!

செப்டம்பர் 18, 2019 342

ஜித்தா (18 செப் 2019): இவ்வாண்டு ஹஜ்ஜில் சிறப்பாக தன்னார்வ பணியாற்றியாதற்காக இந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபோரம் அப்துல் ஜப்பார் இந்திய தூதரகத்தில் சிறப்பு விருது அளித்து கவுரவிக்கப் பட்டார்.

இந்த ஆண்டு சிறந்த ஹஜ் சேவை செய்தவர்கள் இந்திய துணை தூதரகத்தில் கவுரவிக்கப் பட்டனர். அதில், சில வருடங்களுக்கு முன்பு ஹஜ் சேவையின் போது மரணம் அடைந்த தன்னார்வலர் 'நியாசுல் ஹக் மன்சூரி விருது' அப்துல் ஜப்பாருக்கு வழங்கப் பட்டது. இதனை இந்திய துணை கன்சுல் ஜெனரல் முஹம்மது நூர் ரஹ்மான் சேக் வங்கி கவுரவித்தார். மேலும் 2000 சவூதி ரியாலும் அவருக்கு பரிசாக வழங்கப் பட்டது.

அப்போது பேசிய கன்சுல் ஜெனரல் நூர் ரஹ்மான் சேக், இந்திய ஹஜ் தனார்வலர்கள் 6 ஆயிரத்திற்கும் மேலான தன்னார்வலர்கள் விலை மதிப்பற்ற சேவையை செய்ததாக பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார்.

முன்னதாக அப்துல் ஜப்பாரின் பெயரை மக்கா ஹஜ் கமிட்டி பொறுப்பாளர் ஆசிஃப் சயீத் அறிவிக்கயில் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி பாராட்டினர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...