ஜித்தாவில் இந்தியன் சோஷியல் ஃபோரம் சார்பாக நடைபெற்ற சவூதி தேசிய தின கொண்டாட்டம்!

செப்டம்பர் 28, 2019 443

ஜித்தா(28 செப் 2019): சவுதி அரேபியாவின் 89 வது தேசிய தினத்தை முன்னிட்டு 23-09-2019 அன்று இந்தியன் சோஷியல் ஃபோரம் –ஜித்தா தமிழ் பிரிவு சார்பாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது .

இந்நிகழ்ச்சியின் முதல் பகுதியாக விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அதில் கால் பந்து ஷூட்அவுட் ,இறகு பந்து மற்றும் இசைபந்து போன்ற போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது, இரண்டாவது பகுதியாக நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு இந்தியன் சோஷியல் ஃபோரம்-தமிழ் பிரிவின் தலைவர் அல்-அமான் அவர்கள் தலைமை தாங்கினார், பொதுச்செயலாளர் நாசர் கான் வரவேற்புரை நிகழ்த்தி அனைவரையும் வரவேற்றார். இதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிந்த இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் மத்திய கமிட்டியின் பொதுச்செயலாளர் இ.எம் அப்துல்லாஹ் அவர்களும் மத்திய கமிட்டியின் உறுப்பினர் அப்துல் கனி அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். மற்றும் இந்திய பிரடர்னிடி ஃபோரத்தின் ஜித்தா மேற்கு மாகாணத்தின் தலைவர் பயாஸு தீன் மற்றும் இந்திய பிரடர்னிடி ஃபோரம் தமிழ் பிரிவின் தலைவர் சகோதரர் அமிர் சுல்த்தான் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியைசிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியினல் தமிழ் மக்கள் திரளாக கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இறுதியாக சகோதரர் அப்பாஸ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்த, இரவு உணவோடு நிகழ்ச்சி சிறப்பாக முடிவுற்றது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...